Free Web space and hosting from 4t.com
Search the Web


  T.E.L.O

sri annan

TamilNews 

Custom Page

Photo Page

TAMIL EELAM LIBERATION ORGANISATION

"Before my death sentence is carried out, please remove my eyes and transplant them to a Tamil without eyesight. I will not able to see the free Tamil Eelam but, at least, let my eyes see it."
 


எமது இயக்கத்தின் பேரில் தொடரும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ரெலோ விடுக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக ரெலோ இயக்கத்தின் துணை முதல்வரான மு.க.அபுயூசூப் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எனக்கு அறிக்கைகள் விட எந்த உரிமையும் அந்தஸ்தும் இல்லையென பிரகடனப்படுத்தும் இந்திரகுமார் அதே அறிக்கையை மு.க.அபுயூசூப் 2000 ஆம் ஆண்டு ரெலோவின் மாநாட்டில் துணை முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதையும் இந்த அறிக்கையின் மூலம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார்.

2000 ஆம் ஆண்டு அபுயூசூப் தமிழீழ விடுதலை இயக்கத்தின் துணை முதல்வராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னால் 1996 ஆம் ஆண்டிலிருந்து ரெலோவின் நிர்வாகச் செயலாளராக இருந்தார் என்பதை இந்திரகுமார் ஏன் மறந்து விட்டார்.

1992 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். உடன் முரண்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியை முதலில் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புளொட் ரெலோவுடன் ஈ.பி.ஆர். எல்.எவ். பத்மநாபா அணியும் சேர்ந்து தான் வன்னி மாவட்டத்தில் தமிழர் ஒற்றுமை விடுதலைமுன்னணியாக ரெலோ அமைப்பின் அப்போதைய முதல்வாரன சிறிகாந்தாவின் வேண்டுதலின் பேரிலும் தூண்டுதலின் பேரிலும் வன்னியில் போட்டியிட முடிந்தது.

அதே சிறிகாந்தா 1998 இல் ரெலோவுடன் இணைந்து செயல்படுவோம் என்ற வேண்டுதலை ஏற்றுக் கொண்டு ரெலோவில் இணைந்தார். இணைந்ததோடு மட்டுமல்லாமல் இப்போது பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருக்கும் ரெலோ தலைமைக்குழுவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் தங்கியிருந்த போது வட கிழக்கு மாகாணங்களில் நடந்த தேர்தல்களிலும் ரெலோ கணிசமான வெற்றியைப் பெறுவதற்கு அபுயூசூப் பங்களித்தார் என்பதை இந்திரகுமார் உட்பட அவருடன் சேர்ந்த பலருக்கும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அடுத்து ரெலோவின் இன்றைய பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் அபுயூசூப் உட்பட்ட மற்றப் போராளிகளுக்கும் இடையிலான முரண்பாடு பதவி சம்பந்தமான முரண்பாடே அல்ல. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ரெலோ அங்கத்தவர்கள் ஒரு வருடத்திலேயே இன்னொரு பாராளுமன்றத் தேர்தலை 2001 ஆம் ஆண்டு சந்திக்க நேர்ந்த போது ஈ.பி.டி.பி .க்கு முகம் கொடுக்க முடியாமல் ஈ.பி.டி.பி.யை எதிர்த்த எல்லாத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்ற கோரிக்கையை செல்வம்இ சங்கரி என்ற கூட்டு முன் வைத்தது.

இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். பையும் தமிழ் காங்கிரஸையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று செல்வம் விரும்பியும் சங்கரி ஆரம்பத்தில் சம்மதிக்காமல் பின்னர் சம்மதித்தார்.

இது சம்பந்தமாக ரெலோ கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு எல்லாக் கூட்டங்களுக்கும் அபுயூசூப்பும் துணைமுதல்வராகச் சென்றிருந்தார். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல். எவ். உள் நுழைவதை எதிர்த்த சங்கரி சிறிகாந்தாவின் தொந்தரவால் ஏற்றுக் கொண்டு தமிழ்க் காங்கிரஸையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த நான்கு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே "தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் புலிகள்" என்ற வாசகம் வரவேண்டும் என்று காங்கிரஸின் சார்பில் விநாயகமூர்த்தி உறுதியாக வேண்டி வாதிட்டார். அதை முதலில் எதிர்த்தது அபுயூசூப்பின் தலைமையில் ரெலோதான். இந்த ரெலோவின் நிலைப்பாட்டை இன்று வரை ரெலோவின் எந்தத் தலைமைக்குழுவும் எந்த மத்திய குழுவும் எந்தப் பொதுக்குழுவும் எந்தத் தேசிய மாநாடும் இன்று வரை புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொள்ளவேயில்லை . இதுதான் தங்கத்துரை சிறியண்ணா வழி வந்த உண்மை ரெலோப் போராளிகளின் நிலைப்பாடு.

எனவே தான்இ ரெலோவின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு தமிழரசுக் கட்சியின் நிழலிலே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் கொஞ்சப் பேரைத் தவிர்த்த மற்றும் அனைத்து ரெலோப் போராளிகளையும் ஒன்றிணைத்து ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கிலே தமிழ் பேசும் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமையை ஜனநாயக ரீதியில் உறுதிப்படுத்துவதற்கு மிகவும் துன்ப துயரமும் கஷ்டங்களும் உடைய பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.

எங்களை நோக்கி இந்திரகுமார் என்ற அம்பை எய்த வில்லாளிகளுக்கு நாங்கள் மிகவும் தெளிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். நாங்கள் இன்னமும் தமிழ் பேசும் மக்களின் பரந்தும் ஆழமாக வேரூன்றியும் இருக்கும் ஒரு மக்கள் கட்சியல்ல. அந்த மக்களுக்கு சுபிட்சத்தையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கு கங்கணம் கட்டிக்கொண்ட தொண்டர்கள் கட்சியாக மட்டுமே இருக்கிறோம். நாங்கள் புண்கள் இல்லாத போராட்டம் இல்லை என்பதையும் தீயில்லாமல் வேள்வியில்லை என்பதையும் புயலில்லாத கடலும் இல்லை என்பதையும் தொண்டர்களின் தியாகங்கள் இல்லாமல் மக்களுக்கு வசந்தமும் இல்லை என்பதையும் உணர்ந்தவர்கள். இந்த மக்கள் பணியைச் செய்து முடிப்பதற்கு சொகுசும் சுக அனுபவமும் தேடுபவர்களால் முடியாது. அதனாலேயே மக்கள் சேவையை மகேசன் சேவை என்பதை மக்களுக்கும் எடுத்துக் காட்டி அவர்களை வழிநடத்தவே இந்த ரெலோ அலுவலகத் திறப்பு விழா என்பதையும் இதைத் தொடர்ந்து எல்லா அனைத்து மாவட்டங்களிலும் ரெலோ அலுவலகங்கள் புனருத்தானம் செய்துகொள்ளப்படும் என்பதையும் மூலோபாயத்திற்குத் தேவையான அதைப் போசித்து உறுதிப்படுத்தக் கூடிய அன்றாட உபாயங்களை வகுத்து மக்களை வழி நடத்தி அழைத்துச் செல்லத் தயாராகவுள்ள ரெலோ என்னும் ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்பி மற்றும் எம்மத்தியிலுள்ள அனைத்து ஜனநாயக மாற்றுச் சிந்தனையாளர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இயங்கவும் உறுதி பூண்டுள்ளோம்.